இடுகைகள்

மே, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனக்குப் பிடித்த எழுத்தாளர்

படம்
தமிழில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் பலர் இருக்கின்றனர். திருவள்ளுவர் முதல் பிரபஞ்சன் வரை. இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது, என்னை பல வழிகளிலும் பாதித்த எழுத்தாளர், த. ஜெயகாந்தன் அவர்களைப் பற்றி. நான் ஜெயகாந்தனை ரொம்பவும் கால தாமதவாகவே அறிந்து கொண்டேன்.  அது கூட தற்செயலாகத்தான். அப்பொழுது நான் என்னுடைய தேர்வுக்காக மும்முரமாக தயார் படுத்தி கொண்டிருந்த நேரம். ஒரு நாள் நான் புத்தகக் கடையில் புத்தகங்களை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அவரின் "கைவிலங்கு"" புத்தகத்தை  பார்க்க  நேர்ந்தது. வாங்கிப் படித்தேன். அன்று முதல் நான் அவரது அபிமானியாகி விட்டேன்.  அவரது எழுத்துக்களில் உள்ள உணமைதான் என்னை முதலில் கவர்ந்தது. மற்றபடி அவரது தன்னம்பிக்கை, துணிவு மற்றும எழுத்து ஆளுமை என்னை அவரை மேலும் மேலும் படிக்கத் தூண்டியது. அவரது எல்லா புத்தகங்களையும், அச்சிலேயோ அல்லது இணையத்திலேயோ படித்து விட்டேன். சிங்கப்பூருக்கு அவர் வந்த்ருந்த பொழுதும், அவரை நேரடியாக சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவரது எழுத்துக்களை பற்றி இன்னொரு வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளுவேன...