சியோலில் ஐந்து நாட்கள் (5)
22/12/2014 - ஐந்தாம் நாள் கொரியப் பயணத்தின் இறுதி நாள், நான்கு நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்த எங்களுக்கு, அந்த இறுதி நாள் ஒரு வகையில் சற்று சோகமான நாள்தான், சியோலுக்கு அடுத்து எப்பொழுது போகப் போகிறோம் என்கிற சோகம்தான் அது, இருந்தாலும் அந்த ஒரு நாளையும் சிறப்பாக கழிக்க எண்ணி, கொரிய போர் நினைவிடத்திற்கு சென்றோம். இதேவோன்(Itaewon) ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 அடிகள் தூரத்தில்தான் இந்த பிரமாண்டமான தளம் உள்ளது. நுழை வாயிலில் அமைக்கப் பட்டிருக்கும் ராணுவ வீரர்களின் சிலை நம் மனதை பார்த்த மாத்திரத்திலேயே கவர்ந்து விடுகிறது. கொரிய கலாச்சாரத்தைப் பற்றி, அதிலும் குறிப்பாக, கொரிய போரைப் பற்றியும் நாம் இங்கு நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. 1993-ம் ஆண்டில் கட்டி முடிக்கப் பட்ட இங்கு 10,000-திற்கும் மேற்பட்ட போர் சம்பத்தப் பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.அதிலும் வலது புறத்தில் அமைக்கப் பட்டுள்ள விமானங்களின் கண்காட்சி குறிப்பிட்டு சொல்லப் பட வேண்டியது. பழங் காலத்தில் இருந்து இன்று வரை போரில பயன் படுத்தப் பட்ட, படுகிற ஆயுதங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்து...