இடுகைகள்

  தலையெழுத்து - சிறுகதை  “சரி! சரி! பேசாம போ! இதுக்கு மேல குதிச்சுகிட்டு இருந்தேன்னா எனக்கு பொல்லாத கோபம் வந்துடும்!” திடுக்கிட்டுப் போனான் மாணிக்கம். “டேய், நீ யாரிடம் என்னடா பேசுகிறாய்? நான் உன்ன பெத்த அப்பன்’டா!” கத்தினான் அவன். “அதனால்தான் வெறும் பேச்சோட நிறுத்திக்கிறேன். இல்லேன்னா நடக்கிறதே வேற! அப்பன் மாதிரியா நீ நடந்து கொள்கிறாய்? தினம் தினம் குடிச்சுட்டு வந்து அம்மாவை நாய அடிக்கிற மாதிரி போட்டு அடிக்கிறாயே!” பதிலுக்கு கத்தினான் சந்திரன். அப்பனை விட அவன் குரல் ஓங்கியே ஒலித்தது. இவ்வளவு நாட்களாக அடக்கி வைத்திருந்த ஆத்திரமெல்லாம் பீறிட்டு வந்தது சந்திரனுக்கு. அப்பன் மூஞ்சியில் ஓங்கி குத்த வேண்டும் என்று கை பரபரத்தது! “என் பெண்டாட்டியை நான் அடிப்பேன். உதைப்பேன். அதைக் கேக்க நீ யாருடா? தருதலைப் பய மவனே!” குடி வெறியில் ஆக்ரோஷமாகக் கத்தினான் மாணிக்கம். அவனும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. “வேண்டாம்’பா! விட்டுடு. அவர்தான் குடிச்சுட்டு வந்து சத்தம் போடுகிறார் என்றால் நீயும் அவர் கிட்ட மல்லு கட்டிகிட்டு நிற்கிறாயே!” சந்திரனை சமாதானப் படுத்த முயன்றாள் தாயார் மாரியாயி. எங்கே அப்பனும்...

சியோலில் ஐந்து நாட்கள் (5)

படம்
  22/12/2014 - ஐந்தாம் நாள்  கொரியப் பயணத்தின் இறுதி நாள், நான்கு  நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்த எங்களுக்கு, அந்த இறுதி நாள் ஒரு வகையில் சற்று சோகமான நாள்தான், சியோலுக்கு அடுத்து எப்பொழுது போகப் போகிறோம் என்கிற சோகம்தான் அது, இருந்தாலும் அந்த ஒரு நாளையும் சிறப்பாக கழிக்க எண்ணி, கொரிய போர் நினைவிடத்திற்கு சென்றோம். இதேவோன்(Itaewon) ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 அடிகள் தூரத்தில்தான் இந்த பிரமாண்டமான தளம் உள்ளது. நுழை வாயிலில் அமைக்கப் பட்டிருக்கும் ராணுவ வீரர்களின் சிலை நம் மனதை பார்த்த மாத்திரத்திலேயே கவர்ந்து விடுகிறது. கொரிய கலாச்சாரத்தைப் பற்றி, அதிலும் குறிப்பாக, கொரிய போரைப் பற்றியும் நாம் இங்கு நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. 1993-ம் ஆண்டில் கட்டி முடிக்கப் பட்ட இங்கு   10,000-திற்கும் மேற்பட்ட போர் சம்பத்தப் பட்ட பொருட்கள் காட்சிக்கு  வைக்கப் பட்டுள்ளன.அதிலும் வலது புறத்தில் அமைக்கப் பட்டுள்ள விமானங்களின் கண்காட்சி குறிப்பிட்டு சொல்லப் பட வேண்டியது. பழங் காலத்தில் இருந்து இன்று வரை போரில பயன் படுத்தப் பட்ட, படுகிற ஆயுதங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்து...

சியோலில் ஐந்து நாட்கள் [4]

  21/12/2014 - நான்காம் நாள்  கொரியாவிற்கு செல்லும் பொழுது, பனி  சறுக்கு விளையாட வேண்டும் என்று என் மகன் ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததால், நாங்கள் காலையிலேயே Bears Town Ski Resort-ற்கு  கிளம்பினோம். அதற்கு சியோலில் இருந்து சுமார் ஐம்பது நிமிட பஸ் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பஸ் ஓட்டுனரிடம் கட்டணம் எவ்வளவு என்று நான் ஆங்கிலத்தில் கேட்க, அவர் ஆங்கிலம் புரியாமல் கொரிய மொழியில்  ஏதோ  சொல்ல எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் கையிலிருந்த கொரிய பணத்திலிருந்து கட்டணத்திற்கு வேண்டிய தொகையை அவரே எடுத்துக் கொள்ள முதல் பிரச்சனை ஒரு வழியாக தீர்ந்தது. கொரியாவில் வாகனங்கள் சாலையின் வலது தடத்தில் ஓடுகின்றன. தவிர, பஸ் தடம் சாலையின் நடுவில் இருக்கிறது. எனவே பஸ் நிருத்துமிடங்க்களும் சாலையின் நடு தளத்தில் இருக்கின்றன. ஒரு  இருபது நிமிட பயணத்திற்கு பிறகு, பஸ் சியோலுக்கு வெளியே உள்ள மலைப் பாங்கான பகுதிகளில் பயணிக்கிறது. ஒரு புறத்தில் மலைச் சாரலும் இன்னொரு புறம் பள்ளத்தாக்குமாக, கண்ணைக் கவருகின்றன கொரியாவின் கிராமப் புறம். இலையுதிர்ந்த மரங்களும், பனி  படர்ந்த மலைச் சாரலும்,...

சியோலில் ஐந்து நாட்கள் (3)

படம்
சியோலில் ஐந்து நாட்கள் [3] 20/12/2014 - மூன்றாம் நாள் . முன்றாம் நாள் நாங்கள் அற்புதமான ஓர் இடத்திற்கு சென்றோம். சியோலில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள இராணுவமற்ற தளம்தான் அது. ஆங்கிலத்தில் Demilitarized Zone (DMZ) என்று  அழைக்கப் படும் அது கொரிய தீபகற்பகத்தை தென் மற்றும் வட கொரியா என்று பிரிக்கிறது. இரண்டு கொரிய நாடுகளுக்கும் இடையே சுமார் 4 கிலோ மீட்டர் எல்லைப் பகுதியை இராணுவமற்ற பகுதியாக 1953-ம் ஆண்டு, கொரியப் போரின் இறுதியில் பிரகடனப் பட்டது. இந்த எல்லைப் பகுதி சுமார் 250 கிலோ மீட்டர்களுக்கு நீண்டு இருந்தாலும், பன்முன் ஜோம்  (Panmun Jom) எனும் ஒரே இடத்திற்குத் தான் சுற்றுப் பயணிகள் அனுமதிக்கப் படுகிறார்கள். தென் கொரியா செல்வதாக நாங்கள் முடிவெடுத்த பிறகு, இங்கு செல்ல வேண்டியது அவசியம் என்று நான் குறிப்பெடுத்துக் கொண்டேன். அதற்கு முக்கிய காரணம், சரித்திர பாடம், அதிலும் குறிப்பாக கொரிய  போரை பாடமாக போதிக்கும் நான், கொரியா  சென்றும் அங்கு போகா விட்டால்  எப்படி? வட கொரிய  வீரர்களும், தென் கொரிய  வீரர்களும் ஆயுதம் தாங்கிய படி தமது எல்...

உலகம்

படம்
மனிதர்கள் இல்லாத உலகம் சொர்க்கமாக இருக்கும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகம் இல்லை. 

சியோலில் ஐந்து நாட்கள் (2)

படம்
  19/12/2010 - இரண்டாம் நாள்  ஒரு கொரிய நண்பர் எனக்கு ஏற்கனவே சொன்னபடி, அன்று நாங்கள் நம் சான் பார்க்கிற்கும், அங்கிருக்கும் சியோல் கோபுரத்திற்கும் செல்ல முடிவெடுத்தோம். நம் சான் என்பது சியோல் நகரத்தில் அமைந்துள்ள ஒரு மலையின் பெயர். அங்கு அமைந்துள்ள இந்த பூங்கா சியோலுக்கு அழகு சேர்க்கிறது என்பதுதான் உண்மை. மலை அடிவாரத்தில் இருந்து அதன் உச்சி வரை படிகட்டுகள் உள்ளன. நாங்கள் நடந்தே அங்கு சென்றோம். நம் சான் பார்க் - குளிர் காலத்தில்  படிகட்டுகளின் இரு மருங்கிலும், கண்ணுக்கு எட்டிய துரம் வரையில் இயற்கை எழில் காட்சிகள் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன. மலை உச்சியிலிருந்து, சியோல் மாநகரத்தை நாலாபுறமும் பார்க்க முடிகிறது. சியோல் நகரின் மத்தியில் அந்நகரத்தை இரண்டாக பிளக்கும் ஹங்கங் நதி  (Hangang River) அமைதியாக ஓடுகிறது. கோடை காலத்தில் இந்த நதியிலும் அதன் கரைகளிலும் பல activitiகள் நடக்கின்றன. இன்னொரு முறை நான் கொரியாவிற்கு சென்றால் அது கோடை காலத்தில்தான் என்று அப்பொழுது முடிவெடுத்தேன். பிறகு நாங்கள் அந்த மலை உச்சியில் இருக்கும் சியோல் கோபுரத்திற்குள் நுழைந்தோம். இது கோலாலும்பூரில் ...

சியோலில் ஐந்து நாட்கள்

படம்
  சியோலில் ஐந்து நாட்கள்  18/12/2010 - முதல் நாள்  18 டிசம்பர் 2010 - என் குடும்பத்துடன் நான் தென் கொரியாவிற்கு புறப்பட்டேன். ஏன் தென் கொரியா என்று கேட்டால் அதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட பதிலையும் என்னால் சொல்ல முடியாது. எங்காவது செல்ல வேண்டும் என்று விரும்பினோம்.”தென் கொரியாவிற்கு போகலாமே!” என்று என் மகள் சொன்னபோது, “ஏன் கூடாது!” என்று எல்லாரும் சரி என்று முடிவெடுத்தோம். இஞ்சியோன் (Incheon) அனைத்துலக விமான நிலையத்தை அடைந்த பொழுது மணி ஏறக்குறைய மாலை 3.45 (கொரிய நேரம்). ஏற்கனவே தங்குவதற்காக ‘புக்’ பண்ணியிருந்த ஹோட்டலுக்கு முத்லில் புறப்பட்டோம். விமான நிலையத்தில் இருந்து ஒரு ஐம்பது நிமிட ரயில் பயணம் அது. சியோல் நகரில் உள்ள சிட்டி ஹாலில் அமைந்துள்ளது அந்த ஹோட்டல். கொரியாவில் அப்பொழுது குளிர் காலமாதலால், ரயில் வண்டியின் இருக்கைகளில் ஹீட்டரின் மூலம் இதமான சூடு ஏற்றுகிறார்கள். எனவே அந்த பயணம் சுகமாகவே இருந்தது. சியோலில் 11 பெரு விரைவு ரயில் (metro) இணைப்புகள் உள்ளன. ஆனாலும் அந்த 11 இணைப்புகளும் எதாவது ஒரு நிலையத்துடன் இணைக்கப் பட்டுள்ளதால், சியோலின் எந்த பகுதிக்கும் இலகுவாகச செல்...